தனியார் பேருந்து விபத்து மூவர் பலி- வீடியோ

 

தனியார் பேருந்து விபத்து மூவர் பலி- வீடியோ

 

தனியார் பேருந்து விபத்து மூவர் பலி- வீடியோ

 

   

 •  

   

   

 

     
 •  
 •  

 

   
  தனியார் பேருந்து விபத்து மூவர் பலி- வீடியோ
   
   
   
   
   
   
  விருதுநகரில் இருந்து அருப்புகோட்டைக்கு சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து தலை கீழக விழுந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விருது நகரில் இருந்து இன்று காலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்துள்ளது. பேருந்து புளியம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த பள்ளத்தில் பேருந்து தலைகீழாக கவிழ்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவரும் கூலித்தொழிலாளி ஒருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.