ஆறு ஓடியும்…குடிக்க தண்ணீர் இல்லை…கிராம மக்கள் வேதனை- வீடியோ

 

ஆறு ஓடியும்…குடிக்க தண்ணீர் இல்லை…கிராம மக்கள் வேதனை- வீடியோ

 

ஆறு ஓடியும்…குடிக்க தண்ணீர் இல்லை…கிராம மக்கள் வேதனை- வீடியோ

 

   

 •  

   

   

 

     
 •  
 •  

 

   
  ஆறு ஓடியும்…குடிக்க தண்ணீர் இல்லை…கிராம மக்கள் வேதனை- வீடியோ
   
   
   
   
   
   
  ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வைரமங்கலம் ஊராட்சி. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த மாதம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றில் உள்ள குடிநீர் கிணற்றில் சேரும், சகதியும் அடைத்து மோட்டார் இயங்காமல் உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து பலநாட்களாகியும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் வைரமங்கலம் ஆற்றோரமே உள்ள பகுதியாக இருந்தும் குடிப்பதற்கு தண்ணீரின்றி அவதிப்படவேண்டிய அவலம் உள்ளதாகவும். சரியான முறையில் ஆழ்குழாய் தண்ணீரும் போதுமான அளவிற்கு கிடைக்காததால் வெளிப் பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லா கொடுமையாக உள்ளது. குடிப்பதற்கு ஆற்றில் குழிபறித்து நீரை வடிகட்டி எடுத்து வரவேண்டியுள்ளது. குடிநீருக்காக தவித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எங்களை வேதனையடையச் செய்துள்ளது. இதற்கும் எங்கள் ஊராட்சி சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்களின் சொந்த தொகுதியில் உள்ளது அவரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Des : Erode district is in the Bhavani Panchayat Union under the Diamond Farm. There are about 300 families living here.